![]() |
From eMagics |
IPL போட்டிகள் அனல் பறந்து கொண்டிருக்க,பல வர்ணனையாளர்கள் போட்டிபோட்டு கொண்டு வர்ணனை என்ற பெயரில் மொக்கைபோட்டு கொண்டிருக்கிறார்கள். அந்த மொக்கையாளர்களில் டாப் 3 இடங்களை பிடித்து இன்னும் பரபரப்பாக மொக்கை போட்டு கொண்டிருப்பவர்களைப் பற்றி இங்கே காண்போம்.
![]() |
From eMagics |
மொக்கை நம்பர் 3 : அருன் லால்
![]() |
From eMagics |
ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக பேசி நேரத்தை கடத்துவதில் வல்லவர் என்ற நினைப்பு இவருக்கு.உள்ளதை உள்ளபடியே விவரிப்பதில் கைதேர்ந்தவர்.உதாரணத்திற்கு இவரின் பிரசித்தி பெற்ற வர்ணனைகளில் சில : " பேட்ஸ்மேன் பந்தை நேராக அடித்ததால் பந்து நேராக சென்றது ,பவுலர் பந்தை வொய்டாக(wide) வீசியதால்,பந்து வொய்டாக சென்றது"
இவரின் ஆங்கில வர்ணனையை கேட்டு சோனி டிவியே திகிலடைந்து 'ஐயா,தங்களின் ஹிந்தி வர்ணனையே மிகவும் சிறப்பாக உள்ளது' என்று கூறி சிறிது மொக்கைத்தனத்தை தணிக்கை செய்துள்ளது.
மொக்கை நம்பர் 2 : ரஞ்ஜித் பெர்ணாண்டோ
![]() |
From eMagics |
'எங்கிருந்துடா ..புடிச்சீங்க ,இவர.. 'என்று உடனடியாக கேட்கத்தோன்றும், இவரின் வர்ணனையை கேட்டவுடன்.அந்த சிறப்பை பெற்றவர் வேறு யாரும் அல்ல,நம் ரஞ்ஜித் பெர்ணாண்டோ ,இவர் ஒரு இலங்கையின் இறக்குமதி.
இவரின் வார்தை உச்சரிப்பை கேட்டு மகிழவே ஒரு ரசிகர்கூட்டம் ஏங்கி நிற்கிறது.சிறப்பம்சம் 'இஸ்' (is) என்பதை 'ஈஜ்'(ez) என்று உச்சரிப்பது.
என்னமோ 'கார்'லயே பிறந்து வளர்ந்த மாதிரி ,டெண்டுல்'கர்' ஐயும் டெண்டுல்'கார்' என்பார்.இதையெல்லாம் தாங்க முடியாமல் ஒரு கூட்டம் இவரின் வர்ணனையை எதிர்த்து கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கிறது.
மொக்கை நம்பர் 1 : சுனில் கவாஸ்கர்
![]() |
From eMagics |
எத்தனை பேர் போட்டிக்கு வந்தாலும்,நம்ம பெருந்தலையின் மொக்கைத்தனத்தை மிஞ்ச ஆள் உண்டோ? என்ன இருந்தாலும் அனுபவ மொக்கைக்கு ஈடாகுமா. ஆட்டம் எவ்வளவு விறுவிறுப்பாக போய்க் கொண்டு இருந்தாலும் தனது அபார வர்ணனையின் மூலம் அலுப்பூட்ட வைப்பது இவரின் சிறப்பம்சம்.வார்த்தைகளை ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே சீராகப் பேசி,கேட்பவர்களுக்கு செய்தி வாசிப்பதுபோல் ஒரு பீலிங்கை உண்டு பண்ணுவார்.அதனால் என்றும் நம்பர் 1 நம்ம கவாஸ்கரே.
இந்த வருட எஸ்கேப் : ரமீஜ் ராஜா
![]() |
From eMagics |
தப்பிச்சோம்டா சாமி.
மொக்கையில் மகிழ்வாரே மகிழ்வார் மற்றோரெல்லாம்
வெக்கையில் வீழ்ந்தே மடிவர்.
இப்படி ஒரு மிக மொக்கயான பதிவை வழங்கி உங்களையெல்லம் மொக்கயில் திளைக்க வைத்தமைக்கு மன்னிக்கவும்.
நண்பரே என்னுடைய பதிவை உங்கள் வலைப்பதிவில் இணைத்தற்கு நன்றி அத்துடன் உங்கள் பதிவில் பின்னூட்டம் இடும்போது வேர்ட் வெரிபிகேசன் கேட்கிறது அதை எடுத்துவிடுங்கள்
ReplyDeleteஉங்கள் தகவலுக்கு நன்றி,இப்போது எடுத்துவிட்டேன்.
ReplyDeleteஎன் பதிவுக்கு படிக்க வந்து,எதுவும் இல்லாமல் சென்று விடக்கூடாதல்லவா? அதனால் தான் உங்கள் ப்ளாக் ஐ இங்கே சேர்த்தேன்.சும்மா சூப்பரா எழுதுறீங்க