Friday, May 8, 2009

தெரிந்துகொள்வோமே : வாத்து எழுப்பும் சத்தம் எதிரொளிக்குமா? எதிரொளிக்காதா?

From eMagics

பொதுவாக எந்த சத்தமாக இருந்தாலும் எதிரொளிப்பதற்கான சூழல் அமைந்திருக்கையில் அது எதுரொளித்தே தீரும். அப்படியிருக்க வாத்துக்களின் சத்தம் மட்டும் எதிரொளிக்காது என்று ஒரு நம்பிக்கை இருந்து வந்தது.அது எப்படி,வாத்து எழுப்பும் சத்தமும் சத்தம்தானே.இது என்னடா புதிராக இருக்கிறதே என்கிறீர்களா.
From eMagics

இந்த விஷயம் பலருக்கு புதிராகத்தான் இருந்தது.அதனால் தான் இங்கிலாந்தை சேர்ந்த சால்ஃபொர்டு பல்கலைக்கழகம் இந்த நம்பிக்கை உண்மையானதா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டது.அதற்கான லிங்க் இங்கே.
From eMagics


இதற்காக அவர்கள் டெய்சி என்ற வாத்தை ,செவிப்புலன் மற்றும் எதிரொளியை ஆய்வு செய்வதற்கான பிரத்தியேக பரிசோதனைக் கூடத்திற்கு எடுத்து சென்று ஆய்வை மேற்கொண்டனர்.
ஆய்வின் முடிவில் அவர்கள் கண்டது என்னவென்றால் வாத்து எழுப்பும் ஒலியும் எதிரொளிக்கும்.

ஆக மொத்தத்தில் தெரிகிறதென்னவென்றால் இதை நம்பியவர்கள் எல்லாம் வாத்து மடையர்கள் என்பதல்ல,பலரும் இதை நம்பி வந்ததற்கான் காரணத்தை ஆய்வாளர்கள் பலவாறாக கூறுகிறார்கள்.
From eMagics

அவற்றை இங்கே காண்போம்:
1)வாத்துக்கள் எழுப்பும் சத்தம் மற்ற சத்தங்களை போலல்லாமல் அதன் இறுதி அந்தம் மெதுவடைந்துவிடுகிறது,அதனால் அது எதிரொளித்தாலும் மற்றவர்களுக்கு கேட்பதில்லை.
2)அதைப்போலவே இன்னும் ஒரு நுனுக்கமான் தகவல் என்னவென்றால் ,அதன் எதிரொளியும் உண்மையான சத்தத்தை போலவே இருப்பதால் ,இவ்விருவற்றையும் பிரித்து உணர முடியாமல் போய்விடுகிறது என்கிறார்கள்.
3)பொதுவாக வாத்து வாழும் இடங்கள் எதிரொளிப்பதில்லை.அதனால் இது அதிகம் உணர வாய்ப்பில்லாத ஒன்றாக அமைந்துவிடுகிறது.
From eMagics

எதுஎப்படியோ ,நமக்கு தெளிவாக தெரிந்துவிட்டது,இவ்வாறு அறிவியல் என்ற ஒன்று, இயற்கையில் இருக்கும் பற்பல புதிணங்கள் மனித வாழ்விற்கு உதவியாக மாற்றி பெரும் வரத்தை தருகிறது அதே அறிவியல் அழிவிற்காக பயன்படுத்தப்பட்டு சாபத்தை கொடுக்கிறது.எல்லாம் இயற்கையே!
From eMagics


ஆனால் எனக்கு இன்னும் புதிராக உள்ளது, இந்த வாத்து மடையன் என்ற வார்தை எப்படி வந்ததென்று? ;-)

Leia Mais…

Thursday, April 23, 2009

மொக்கை மன்னர்களின் படையெடுப்பு

From eMagics


IPL போட்டிகள் அனல் பறந்து கொண்டிருக்க,பல வர்ணனையாளர்கள் போட்டிபோட்டு கொண்டு வர்ணனை என்ற பெயரில் மொக்கைபோட்டு கொண்டிருக்கிறார்கள். அந்த மொக்கையாளர்களில் டாப் 3 இடங்களை பிடித்து இன்னும் பரபரப்பாக மொக்கை போட்டு கொண்டிருப்பவர்களைப் பற்றி இங்கே காண்போம்.
From eMagics


மொக்கை நம்பர் 3 : அருன் லால்
From eMagics

ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக பேசி நேரத்தை கடத்துவதில் வல்லவர் என்ற நினைப்பு இவருக்கு.உள்ளதை உள்ளபடியே விவரிப்பதில் கைதேர்ந்தவர்.உதாரணத்திற்கு இவரின் பிரசித்தி பெற்ற வர்ணனைகளில் சில : " பேட்ஸ்மேன் பந்தை நேராக அடித்ததால் பந்து நேராக சென்றது ,பவுலர் பந்தை வொய்டாக(wide) வீசியதால்,பந்து வொய்டாக சென்றது"
இவரின் ஆங்கில வர்ணனையை கேட்டு சோனி டிவியே திகிலடைந்து 'ஐயா,தங்களின் ஹிந்தி வர்ணனையே மிகவும் சிறப்பாக உள்ளது' என்று கூறி சிறிது மொக்கைத்தனத்தை தணிக்கை செய்துள்ளது.

மொக்கை நம்பர் 2 : ரஞ்ஜித் பெர்ணாண்டோ
From eMagics


'எங்கிருந்துடா ..புடிச்சீங்க ,இவர.. 'என்று உடனடியாக கேட்கத்தோன்றும், இவரின் வர்ணனையை கேட்டவுடன்.அந்த சிறப்பை பெற்றவர் வேறு யாரும் அல்ல,நம் ரஞ்ஜித் பெர்ணாண்டோ ,இவர் ஒரு இலங்கையின் இறக்குமதி.
இவரின் வார்தை உச்சரிப்பை கேட்டு மகிழவே ஒரு ரசிகர்கூட்டம் ஏங்கி நிற்கிறது.சிறப்பம்சம் 'இஸ்' (is) என்பதை 'ஈஜ்'(ez) என்று உச்சரிப்பது.
என்னமோ 'கார்'லயே பிறந்து வளர்ந்த மாதிரி ,டெண்டுல்'கர்' ஐயும் டெண்டுல்'கார்' என்பார்.இதையெல்லாம் தாங்க முடியாமல் ஒரு கூட்டம் இவரின் வர்ணனையை எதிர்த்து கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கிறது.

மொக்கை நம்பர் 1 : சுனில் கவாஸ்கர்
From eMagics

எத்தனை பேர் போட்டிக்கு வந்தாலும்,நம்ம பெருந்தலையின் மொக்கைத்தனத்தை மிஞ்ச ஆள் உண்டோ? என்ன இருந்தாலும் அனுபவ மொக்கைக்கு ஈடாகுமா. ஆட்டம் எவ்வளவு விறுவிறுப்பாக போய்க் கொண்டு இருந்தாலும் தனது அபார வர்ணனையின் மூலம் அலுப்பூட்ட வைப்பது இவரின் சிறப்பம்சம்.வார்த்தைகளை ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே சீராகப் பேசி,கேட்பவர்களுக்கு செய்தி வாசிப்பதுபோல் ஒரு பீலிங்கை உண்டு பண்ணுவார்.அதனால் என்றும் நம்பர் 1 நம்ம கவாஸ்கரே.

இந்த வருட எஸ்கேப் : ரமீஜ் ராஜா
From eMagics

தப்பிச்சோம்டா சாமி.

மொக்கையில் மகிழ்வாரே மகிழ்வார் மற்றோரெல்லாம்
வெக்கையில் வீழ்ந்தே மடிவர்.


இப்படி ஒரு மிக மொக்கயான பதிவை வழங்கி உங்களையெல்லம் மொக்கயில் திளைக்க வைத்தமைக்கு மன்னிக்கவும்.

Leia Mais…

Ads by Adbrite

Your Ad Here